Tuesday, October 29, 2013

தேன்குழல்
தேவையானவை: அரிசி - 3 கப், உளுத்தம்பருப்பு - அரை கப், உப்பு - தேவையான அளவு, சீரகம் - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுத்து... அரிசி சேர்த்து மெஷினில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு, சீரகம், வெண்ணெய் கலந்து, தண்ணீர் தெளித்துப் பிசையவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, மாவை தேன்குழல் அச்சில் போட்டு பிழிந்து, பொரித்தெடுக்கவும்
கிட்னி கல் என்றால் என்ன?
சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ,
(crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.
கிட்னியில் கற்கள் உருவாவதற்கான காரணங்கள். . .
கிட்னியில் கல் உருவாவதற்கான காரணங்களை அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.
இந்நோய் சுலபமாக ஏற்படுவதற்கான உடல் கூறு கொண்டவர்களுக்கு, உணவுப்பொருள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறமுடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கிய கற்களே மிகுதியாக காணப்படுகின்றன. இம்மூலகங்கள் சிறுநீரில் கூடுதலாக வெளிப்படும் நோய்களில் இவை தோன்றுகின்றன. பாரா தைராய்டு மிகுதி நோயும் (Hyperparathyroidism), சிறுநீர்ப் பாதையில் தொற்றுகள் (Urinary tractinfections), , சிறுநீரக நோய்கள் (Cystic kidney diseases) போன்ற நோய்களும் இவ்வகைக் கற்கள் ஏற்பட முக்கியமான காரணங்களாகும்.
யூரிக் அமிலம், புரதச் சத்து சிதைப்பிற்கு பின்பு உண்டாகும் கழிவுப் பொருளாகும். இது ரத்தத்தில் 6 மிலி கிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி நொதிக்குறைகள் சிலவற்றில் யூரிக் அமிலம் இந்த அளவை தாண்டும்போது மிகுதியான யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அது கற்களாக படிவதுண்டு.
நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் oxalate மற்றும் phosphate உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன.
சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் (Diuretics) கால்சியம் கலந்த antacid மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
பிறவியிலேயே ஏற்படும் சில நொதிக் குறைகளில் சிறுநீரில் ஆக்ஸாலிக் அமிலம், சிஸ்டீன் போன்ற வேதியல் பொருள்கள் மிகுதியாக வெளிவரும். இவைகளும் கிட்னியில் கல் உருவாக ஏதுவாகிறது.
கிட்னி கற்கள் யாருக்கு வரும். . .
பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களக்கு இந்த நோய் வருகிறது. பெண்களைப் பொறுத்தவரை, 50 வயதைத் தாண்டும்போது இந்த நோய் வருகிறது. ஒருவருக்கு ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. நோயாளியின் பெற்றோர்களுக்கோ அல்லது முன்னோர்களுக்கோ, இந்த பாதிப்பு இருந்தாலும், இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
கிட்னி கல் – அறிகுறிகள். . .
சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படும்.
சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.
சில நேரங்களில் சிறுநீர் ரத்தத்துடன் கலந்து வெளியேறும்.
நீர்த்தாரையில் எரிச்சல் உண்டாகும்.
அளவில் சிறியதான கற்கள் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.
சிறுநீரக கற்களை எக்ஸ் கதிர், கணினி அச்சு வெட்டு, நுண் ஒலி துருவு படங்கள் ஆகியவற்றின் மூலம் அறியலாம். சிறுநீரக கற்கள் உள்ள நோயாளி தாமாகவே வெளிக்கொணரும் கற்களைஆராய்ந்து அதில் கால்சியம், பாஸ்பேட், ஆக்ஸலேட்களும் மிகுதியாக இருப்பதை அறியலாம். இவற்றை கொண்டு கற்கள் உருவாவதற்கான காரணங்களை அறிந்து அவற்றை அகற்ற வேண்டும்.
ஆராய்ச்சியின் முடிவுகள். . .
Eric taylor MD மற்றும் அவருடைய சக ஆராய்ச்சியாளர்களும் நடத்திய மிகப் பெரிய ஆய்வின் சாராம்சம் :
மூன்று பிரிவுகளாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஒன்று :-Health professionals follow up study
45,821 ஆண்களிடையே 18 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு
இரண்டு :- Nurses Health study I
94,108 வயது முதிர்ந்த பெண்களிடையே 18 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு.
மூன்று :- Nurses Health study II
1,01,837 இளம் பெண்களிடையே 14 வருட காலம் நடத்தப்பட்ட ஆய்வு
Dr. Taylor குழு இந்த மூன்று பிரிவானவர்களில் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் எட்டு விதமான அளவுகோல்களை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். DASH (Dietary Approaches to Stop Hypertension) என்பது இந்த ஆய்வின் பெயர்.
இதில் உள்ள 8 அளவுகோள்கள் யாதெனில்,
1. அதிகமான பழங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது.
2. அதிகமான காய்கறிகள் அன்றாடம் உட்கொள்வது.
3. அதிகமான பருப்பு மற்றும் விதை (Nuts & Legumes) வகைகள் உட்கொள்வது.
4. குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்கள் உட்கொள்வது.
5. முழுமையான தானிய வகைகள் (மேல் தோல் நீக்கப்படாத தானிய வகைகள்) சேர்த்தல்
6. குறைந்த அளவிலான உப்பு சேர்த்தல்.
7. குறைந்த அளவிலான இனிப்பு வகைகள் உட்கொள்ளுதல்.
8. குறைந்த அளவிலான இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உட்கொள்ளுதல்.
இப்படிப்பட்ட உணவு முறைகளை கடைபிடித்தவர்களிடையே அதிக ரத்த அழுத்தம் (Hypertension), நீரிழிவு (Diabetes) , சிறுநீரக கற்கள் (Kidney stone) உருவாவது போன்ற நோய்கள் வரும் வாய்ப்பு குறைவான அளவே உள்ளது என்பதை விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
நாம் இந்த ஆய்வின் மூலம் அறிந்துகொள்ள வேண்டியது. . .
மேற்கொண்ட உணவுப் பழக்கங்களை பின்பற்றினால், சிறுநீரக கல் உருவாகும் நிலை தடுக்கப்படும் என்பதே.
சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்க வந்த பின் திரும்ப வராமல் தடுக்க அறுவை சிகிச்சைக்குப் பின் திரும்பவும் கல் உருவாகாமல் தடுக்க மேற்கண்ட உணவு முறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அதாவது,
*நார்ச்சத்து அதிகமான காய்கறிகள், பழ வகைகள், முழு தானிய வகைகள் மற்றும் பீன்ஸ் இவைகளை அதிகமாக ஆகாரத்தில் சேர்க்க வேண்டும்.
*முக்கியமாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். 8 முதல் பத்து தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும்.
*பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
*வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
*மீன், உணவுக்காக வளர்க்கப்படும் லெகான் கோழிகள் போன்றவை சிறுநீரில் அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். எனவே இவற்றை உட் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
*பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
*திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ராச்ப்பெர்ரி போன்ற பழவகைகளையும், பூசணிக்காய், வாழைத்தண்டு, போன்ற நீர்ச்சத்து மிகுந்த காய்களையும் நம் அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
*வாட்டர் மிலன், ஆப்பிள், எலுமிச்சை பழச்சாறுகள் சிறுநீரக கற்களைக் கரைக்கும் தன்மை கொண்டவை.
* புரோட்டீன் அதிகமுள்ள இறைச்சி போன்ற பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.
* சாக்லேட், காஃபி, கீரைகள், டீ போன்றவற்றில் ஆக்ஸலேட் அதிகம் உள்ளது. இவற்றை தவிர்க்க வேண்டும்.
நம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்-Arthritis) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம் நாம் அறியவேண்டியது ஒன்று நாம் சிறுவயதில் ஓடி ஆடி விளையாடுகிறோம். சிறுவ...யதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்துவிடுகிறோம். வயதானால் நல்ல டாய்லட் அல்லது வேறு பல காரணங்களால் அடக்கிக் கொள்கிறோம். சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்திற்காக, நேரத்திற்காக அடக்கி வைக்கிறோம் இந்த நிலை பெண்களுக்கு 10 வயது முதலும், ஆண்களுக்கு 18 வயது முதலும் ஆரம்பிக்கும். இந்த நேரங்களில் நமது சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்ற இயலாமல் தவிக்கிறது. அப்பொழுது மூளையிலிருந்து செல்லும் உத்தரவு மூலமாக தற்காலிகமாக சிறுநீரகம் தன் வேலையை நிறுத்தி வைக்கிறது. இதனால் நம் உடலில் ஓடும் ரத்தம், சிறுநீரை வெளியேற்றாமல் அப்படியே எல்லா இடங்களுக்கும் செல்கிறது. அவ்வாறு செல்லும்போது இரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் கிறிஸ்டல்ஸ் (uric acid crystals) மூட்டுகளில் படிந்து விடுகிறது. இந்தச் சிறு சிறு கற்கள் சுமார் சினோரியல் மெம்கிரேம் (நமது மூட்டுகள் நம் எண்ணத்திற்கு ஏற்ப அசைவதற்கு உதவும் ஒரு தசை) என்னும் இடத்தில் உட்கார்ந்து விடுகிறது. இது பல வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது. சிலருக்கு 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின்(rheumatoid arthritis) ஆரம்ப நிலை. இந்தியாவில் 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ முறைகளில் இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை. நம் முன்னோர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை. ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டியிலிருந்து இந்தியாவின் சில மூலிகைகளை காப்பாற்றியும், அதில் உள்ள மருத்துவக் குணங்களையும், எந்த மூலக்கூறு ஒவ்வொரு மூலிகையிலும் எந்தெந்த வியாதிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது என்பதைப் பற்றியும் கூட்டு முயற்சியில் செயல்பட்டார்கள். அப்போது முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள். இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது. முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும். மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும். — with Kiruthika Ak and Saranya Soundararajan.
Which countries work like crazy and which ones work hard?
Countries like South Korea and Mexico get the work-ethic prize.
The more blue a country is, the more workers like to chill: Congrats France!
The index combines average hours worked per year and average retirement age to create the ultimate index. (Many countries aren't represented, because they aren't in the OECD, and thus not in the OECD statistical database from which the information was drawn.)
Click the image to enlarge


Read more: http://www.businessinsider.com/map-of-countries-that-work-hard-2013-9#ixzz2j8MT0snB
மதுரை மீனாக்ஷி அம்மையின் குங்கும மகிமை :

மீனாட்சி குங்குமத்தில் காந்தத்தன்மை கொண்டது. மதுரை மீனாட்சி குங்குமம் காந்தசக்தி மிக்கது என்கிறார் இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர். இவர் ஒருமுறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கே அவருக்கு குங்கும பிரசாதம் கொடுத்தார்கள். அடுத்து, சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு சென்ற போது விபூதி தரப்பட்டது. இதை ஏன் இந்திய மக்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள் என்பதை அறிய அவருக்கு ஆவல். உடனே, அதை பரிசோதனை செய்தார். அவற்றிலிருந்து காந்தசக்தி வெளிப்பட்டதை உணர்ந்தார். இது என் வாழ்வில் நான் கண்ட அதிசயம் எனதான் எழுதிய தி இன்னர் லைப் என்ற புத்தகத்தில் எழுதினார். இதை விட அதிசயம் ஒன்று உண்டு என்றும் அவர் சொல்கிறார். சில ஆண்டுகள் கழித்தபிறகு, அந்த குங்குமம், விபூதியை பரிசோதனை செய்தார். அப்போதும், முன்பு கண்ட அதே அளவு காந்தசக்தி சற்றும் குறையாமல் வெளிப்படுவது கண்டு அசந்து போனார். இப்படி ஓர் அதிசயத்தை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை என்று அவர் எழுதி வைத்திருக்கிறார். நாம், மீனாட்சி குங்குமத்தை கோயில் தூண்களில் கொட்டி வைத்து பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். இனிமேலாவது, அன்னையின் குங்குமத்தை அளவோடு வாங்கி, பூஜையறையில் பத்திரமாக வைப்போம். அன்னையின் அருட்கடாட்சம் என்று நிலைத்திருக்கச் செய்வோம்.
— at Madurai Meenakshi Temple.
Akshaya Patra Foundation

http://www.youtube.com/watch?v=6C5E5nzL6_4
The history of Akshaya Patra Foundation starts with a story of compassion.
...
Looking out of a window one day in Mayapur, a village near Calcutta, His Divine Grace A.C Bhaktivedanta Swami Prabhupada saw a group of children fighting with street dogs over scraps of food. From this simple, yet heart breaking incident, came the determination that: No one within a ten mile radius of our center should go hungry.

It is his inspiration which helped us to create The Akshaya Patra Foundation as it is today.

We began this initiative with the vision that “No child in India shall be deprived of education because of hunger.”

In June 2000, we started our mid-day meal program in Bangalore by feeding 1500 children in 5 schools. At that time there was no State run school meal program in Karnataka. Within a few short weeks we had received hundreds of requests from teachers who expressed the dire need of such a scheme.

This over whelming response was the impetus for the growth of The Akshaya Patra Foundation.

For more details log on to http://www.akshayapatra.org/
See More

சபரி மலை செல்வது ஒரு யாகம் :-

சபரிமலைக்கு அய்யன் தரிசனத்தின் போகும் போது நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனுக்கு காணிக்கையாய் கொடுக்க நெய் கொண்டு செல்வது காலம் காலமாய் இருந்து வருகிறது. இந்த வழக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா? ...

இருமுடியில் நெய் நிறைத்து நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு எனக்கு தெரிந்த வரை முன்று காரணங்கள் உள்ளன. முதல் இரண்டு காரணங்கள் புராண கதைகளை சார்ந்ததாகவும் , மூன்றாவது நமது வாழ்கையை சார்த்துமாய் உள்ளன.

முதல் காரணம்: பந்தளராஜன் மனைவிக்கு தலைவலி ஏற்படுகிறது. உடனே புலிப்பாலால் தலைவலி தீரும் என பொய்க்காரணம் காட்டி ஐயப்பனை காட்டுக்கு அனுப்புகின்றனர். வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்பதற்காக பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினான். அதே சமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம்போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் வைத்துக் கொடுத்தான். அந்த இருமுடிகளையும் இணைத்து திருமுடிமேல் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றான். இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஸ்ரீஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. இவ்வாறு ஐயப்பன் செய்தது போலவே, இருமுடியை தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறையாக அதுமாறி, நாளடைவில் நிலைத்தும்விட்டது.

இரண்டாவது காரணம்: ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தளமகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை விட்டு பிரிந்து செல்லும் காலம் வந்தது. ஐயப்பன் பிரியும் நேரத்தில் மணிகண்டா, நீ காட்டுக்குள் குடியிருக்கப் போவதாய் சொல்கிறாய். அங்கே மலைகளைக் கடந்து வரவேண்டும். அவை சாதாரண மலையல்ல. வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்றார். அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்து விடலாம் என அருள்பாலித்தார். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தளராஜா மலைக்குச் செல்வார்.மகனை வெறுங்கையோடா பார்க்கச் செல்ல முடியும். அவனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டாமா? என்ன கொண்டு செல்வது என யோசித்தார். நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று.

எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார். மேலும் தனி நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். ஐயப்பனைக் காணப் செல்வதென்றால் எளிதான காரியமா? இன்று போல அன்று பஸ், ரயிலெல்லாம் கிடையாதே! எனவே பந்தளத்திலிருந்து நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும்.எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இருமுடிகட்டில் முக்கியமானது நெய் தேங்காய்தான். அத்துடன் ஐயப்பன் அரண்மனையில் இருந்த போது அணிந்த நகைகளையும் எடுத்துச் சென்ற பழக்கம் நாளடைவில் உருவானது. அது இப்போது பெரும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கருடன் வழிகாட்டுவது விசேஷ அம்சம். வயதான அவர் மலை ஏற முடியாமல் ஐயோ அப்பா என்று சொல்லியபடியே பல இடங்களில் உட்கார்ந்தும் விடுவார். இந்தச் சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆனதாகவும் சொல்லப்படுவதுண்டு.

மூன்றாவது முக்கிய காரணம், தேங்காய் மற்றும் ஓடு என்பது நமது உடல். தேங்காயில் எல்லாம் நமது நாடி நரம்புகளால் சூழ பட்டது. தேங்காயின் உள்ளே உள்ள வெள்ளை பகுதி நமது சதை பகுதி, நமது உடல் முழுவதும் நீர் மற்றும் இரத்தம்நிரம்பி உள்ளது அது தான் இளநீர். நமக்கு இருப்பது போல் தேங்காயின் வெளியே இரண்டு கண்கள் உள்ளன. மூன்றாவது கண் தான் ஞான கண். நெய் நிறைப்பதற்கு முன் தேங்காயின் மூன்றாவது கண் ஆன ஞான கண் திறக்கபட்டு அதன் உள்ளே உள்ள இளநீர் வெளியே எடுக்கபட்டு, பிறகு நமது ஆன்மாவை நெய்யாக உறுக்கி, மூன்றாவது கண் ஆன ஞான கண் வழியாக நமது
துயமான ஆத்மாவை நெய் வடிவில் உருக்கி நீரைக்க படுகின்றது. சபரிமலை சென்று அடைந்த பிறகு குருசுவாமி துணை கொண்டு அந்த தேங்காயை இரு பாகமாக உடைக்கப்பட்டு , அதாவது நமது ஆணவம், அகம்பாவம் எல்லா வற்றையும் உடைத்து,நெய்யை மட்டும் வெளியே எடுத்து, அந்த பரிசுத்தமான நமது ஆன்மா வடிவிலான நெய்யை சரணாகத வத்சலனான சபரிகிரி வாசனுக்கு அபிஷேகம் செய்ய படுகின்றது. நமது ஆன்மாவே இறைவனிடம் சேர்த்த பின் நமது உடல் உயிர் இல்லாத பிணம். அதை உணர்த்த தான் தேங்காய் இரண்டு பாகத்தையும் தீயில் இடுகின்றோம்.

பக்தர்களே நவம்பர் 17ம் தேதி கார்த்திகை 1 ஆம் அய்யப்ப பக்தர்கள் எல
See More
சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்...
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

ALOEVEERA

சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத
்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.
...
3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்
9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை
க்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்